Dec 09, 2018 07:35 AM

தொழிலதிபர் கொலை! - பிரபல சீரியல் நடிகை கைது

தொழிலதிபர் கொலை! - பிரபல சீரியல் நடிகை கைது

தொழிலதிபர் கொலை செய்யப்பட்ட பிரபல டிவி சீரியல் நடிகை கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

‘சாத் நினபா சத்யா’ என்ற இந்தி சீரியலில் நடித்து பிரபலமானவர் தேவுலீனா பட்டாச்சாரிஜி. பல வருடங்களாக இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், மும்பை போலீசார் நடிகை தேவுலீனாவை கொலை வழக்கு ஒன்றில் கைது செய்துள்ளனர்.

 

ராஜேஸ்வர் என்ற தொழிலதிபர், கடந்த ஒரு வாரமாக வீட்டுக்கு வரவில்லை என்று போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நேற்று முன் தினம் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

Devoleena

 

தொழிலதிபர் ராஜேஸ்வருடன் நடிகை தேவுலீனா தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், இந்த கொலை வழக்கு தொடர்பாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அந்த தொழிலதிபர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. அவர்களை அனைவரையும் போலீசார் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

 

இந்த சம்பவம் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.