Oct 03, 2018 04:20 AM

பாத்ரூமில் இறந்து கிடந்த சீரியல் நடிகை!

பாத்ரூமில் இறந்து கிடந்த சீரியல் நடிகை!

சின்னத்திரை நடிகைகள் பலர் தற்கொலை செய்துக்கொள்வதோடு, சில மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் சீரியல் உலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், சீரியல் நடிகை ஒருவர் பாத்ரூமில் இறந்த கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

’ஹே ஹை மொகபத்தெய்ன்’ (Yeh Hai Mohabbtein) என்ற சீரியலில் வேலைக்காரப் பெண் வேடத்தில் நடித்து வந்தவர் நடிகை நீறு அகர்வால், மேலும் சில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

 

இந்த நிலையில், கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நீறு அகர்வால், நேற்று பாத்ரூமில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சியில் ஈடுபடுவதற்குள் அவரது உயிர் பிரிந்துவிட்டதாம்.

 

நீறு அகர்வாலின் இந்த மரணம் பற்றிய தகவலை அதே சீரியலில் நடிக்கும் மற்றொரு நடிகையான அலி கோனி தெரிவித்திருக்கிறார்.