Dec 07, 2018 01:59 AM

16 வயது பெண் புகார்! - பிரபல பின்னணி பாடகர் கைது

16 வயது பெண் புகார்! - பிரபல பின்னணி பாடகர் கைது

பிரபல பின்னணி பாடகி சின்மயி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ் சினிமா பிரபலங்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, பல பின்னணி பாடகர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அதற்கு பின்னணியில் உள்ள பிரபலங்களில் பெயர்களை வெளியிட இருப்பதாகவும் கூறினார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதற்கிடையே, கடந்த சில நாட்களாக சின்மயி எந்த ஒரு பாலியல் புகாரும் கூறாமல் அமைதியாக இருக்கும் நிலையில், பிரபல பின்ணனி பாடகர் ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் மிகா சிங். இந்தி பாடல்கள் மட்டும் இன்றி பிற மொழி சினிமாக்களிலும் பாடல்கள் பாடியுள்ள மிகா சிங் மீது பிரேசிலை சேர்ந்த இளம்பெண் ஒருவர், மிகா சிங் ஆபாச மெசஜ் அனுப்பியதாக புகார் அளித்ததை தொடர்ந்து அவர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற மிகா சிங்கை, அந்நாட்டு போலீசார் கைது செய்திருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.