Dec 07, 2018 05:37 AM

பிரபல தொலைக்காட்சியின் கையில் ‘விஸ்வாசம்’!

பிரபல தொலைக்காட்சியின் கையில் ‘விஸ்வாசம்’!

இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து நடிக்கும் நான்காவது படமாக உருவாகியுள்ள ‘விஸ்வாசம்’ பொங்கலுக்கு வெளியாகிறது. அதே தினத்தில் ரஜினியின் ‘பேட்ட’ படமும் வெளியாக இருப்பதால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

தற்போது, ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளும் முடிவடையும் தருவாயில் உள்ளதால், படத்திற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டிருப்பதோடு, வியாபரமும் தொடங்கியிருக்கிறது.

 

முந்தைய படங்கள் அல்லாம அல்லாமல், இந்த முறை படத்தை கமர்ஷியலாக இயக்கியிருக்கும் சிவா, அஜித் மீது மட்டும் நம்பிக்கை வைக்காமல், பிற நட்சத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தான் விஸ்வாசம் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் படத்திற்கு பெரிய அளவில் புரோமோஷன் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.