சூர்யாவின் பிறந்தநாளோடு ‘கருப்பு’ டீசரை கொண்டாடும் ரசிகர்கள்!

நடிகர் சூர்யாவின் மாஸ் அவதாரத்தில் உருவாகி வரும் ‘கருப்பு திரைப்படத்தின் அப்டேட்டுக்காக அவரது ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சூர்யாவின் பிறந்தநாளோடு சேர்த்து ‘கருப்பு’ பட டீசரையும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
1 நிமிடம் 38 விநாடிகள் ஓடக்கூடிய இந்த டீசர், ஒவ்வொரு காட்சியிலும் சூர்யாவின் மாஸ் லுக், அனல் பறக்கும் ஃபிரேம்கள், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வசனங்கள் என சூர்யா ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் தயாரிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், அவரின் வழக்கமான ஃபார்முலாவிலிருந்து விலகி, அதிரடியான மாஸ் கோணத்தில், துணிச்சலான புது முயற்சியாக அமைந்துள்ளது. சூர்யா, ஆர்ஜே பாலாஜி இணைந்திருக்கும் இந்த புதுக்கூட்டணி, அனைத்து ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையிலான அட்டகாசமான படைப்பை வழங்கவுள்ளது.
ஜி.கே.விஷ்ணுவின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு ஷாட்டையும் அட்டகாசமாக காட்சிப்படுத்தி, அழகும் சேர்த்துள்ளது. அதற்கு இணையாக, சாய் அபயங்கர் பின்னணி இசை, டீசரை உணர்வுமிக்கதாகவும் அதிரடி நிறைந்ததாகவும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இப்படம் அவரது இசை பயணத்தில் முக்கியமான படியாக அமைந்துள்ளது. அருண் வெஞ்சரமூடுவின் கலை இயக்கம், படத்தின் ஒவ்வொரு இடத்தையும் மிக நுணுக்கமான வடிவமைப்புடன், அழுத்தமான, உணர்வுப்பூர்வமான தருணங்களாக அழகாக்கியுள்ளது.
நாயகி த்ரிஷாவின் தோற்றம் டீசரில் இடம்பெறவில்லை. டிரைலருக்கான சர்பரைஸாக அது இருக்கும். ஆனால் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி, ஷிவதா, நட்டி, மற்றும் சுப்ரீத் ரெட்டி போன்ற திறமைமிக்க நடிகர்கள் இப்படத்தில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளனர்.
கலைவாணனின் எடிட்டிங் மற்றும் அன்பறிவ் – விக்ரம் மோர் ஆகியோரின் ஆக்ஷன் காட்சியமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும் திருவிழா வெளியீடாக வெளியாகவுள்ள இப்படம், டீசரிலேயே கொண்டாட்டத்தை உறுதி செய்துள்ளது. இதோ ரசிகர்களுக்கான கொண்டாட்டம் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிவிட்டது.