Dec 26, 2018 06:26 PM

குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம்! - ஷாக் கொடுக்கும் தமிழ் நடிகை

குழந்தை பெற்ற பிறகு தான் திருமணம்! - ஷாக் கொடுக்கும் தமிழ் நடிகை

சாதாரண மக்களிடம் லிவ் இன் ரிலேஷன்ஷிப் அதிகரித்து வரும் நிலையில், சினிமாவில் இத்தகைய உறவு முறை ரொம்பவே சகஜமாகிவிட்டது. இருப்பினும் இது குறித்து எந்த நடிகையோ, நடிகரோ வெளிப்படையாக இதுவரை பேசியதில்லை.

 

ஆனால், தற்போது அதை மாற்றியிருக்கும் நடிகை ஒருவர், லிவ் இன் ரிலேஷன்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசியது மட்டும் இன்றி, தனது பேச்சில் ஒரு படி மேலே சென்று, அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

சாந்தனு நடித்த ‘கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரேஷ்மி கவுதம். அப்படத்தை தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், பிறகு தெலுங்கு சினிமாவுக்கு போய்விட்டார். ஆந்திராவை சேர்ந்த இவர், தற்போது ‘ஜபர்தஸ்த்’ என்ற டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

 

ஏராளமான ரசிகர்களைக் கொண்ட ரேஷ்மி, ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய போது, அவரது காதல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய ரசிகர் ஒருவர், “திருமணம் எப்போது?” என்று கேட்க, அதற்கு ரேஷ்மி மேனன், “முதலில் குழந்தை பெற்றுக்கொண்டு பிறகு தான் திருமணம் செய்துகொள்வேன். அதனால் இன்னும் தாமதமாகும்.” என்று கூறி அனைவருக்கும் ஷாக் கொடுத்திருக்கிறார்.

 

Reshmi Menon

 

சுதீஷ் என்பவரை காதலித்து வரும் நடிகை ரேஷ்மி மேனன், அவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.