பிக் பாஸ் வீட்டில் திரும்ப திரும்ப அசிங்கப்படும் காயத்ரி!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களான காயத்ரி, வையாபுரி, சினேகன், சுஜா வாருணி, ஆர்த்தி ஆகியோர், தற்போதைய பிக் பாஸ் இரண்டாம் சீசனில் விருந்தினர்களாக பங்கேற்றுள்ளார்கள். முதல் சீசனின் போட்டியாளர் ஆரவும் கடந்த இரண்டு வாரங்களாக சிறப்பு விருந்தினராக இருந்துவிட்டு சென்றார்.
இதற்கிடையே, முத சீசனில் போட்டியாளராக இருந்த காயத்ரி, பிக் பாஸ் வீட்டில் நடந்துக் கொண்டவிதத்திற்காக ரசிகர்களின் கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார். போட்டியில் இருந்து விலகிய பிறகும், அவரை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்ததோடு, கலாய்த்தும் வந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் சீசனின் விருந்தாளியாக பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் காயத்ரி, தற்போது ரசிகர்கள் மூலம் அசிங்கப்படுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு சீசன் போட்டியாளர்கள் கலந்துக் கொண்ட கலை நிகழ்ச்சி நேற்று பிக் பாஸ் வீட்டில் நடத்தப்பட்டது. இதில், நடன இயக்குநரான காயத்ரி, முதல் சீசன் போட்டியாளர்களுக்கு நடன அசைவுகளை சொல்லிக்கொடுத்தார்.
ஆனால், சீசன் 2 போட்டியாளர்கள் தாங்களாகவே தங்களுக்கு தெரிந்த ஸ்டெப்புகளை வைத்து நடனத்திற்கு தயாரானார்கள். சீனியர்கள் “சொடக்கு மேல சொடக்கு..” பாடலுக்கு நடனம் ஆட, ஜூனியர்கள் “சோகமா...” பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.
இறுதியில் இரண்டு தரப்பினரும் நடனம் ஆட, சீனியர்களை விட ஜூனியர்கள் நடனம் தான் ரசிக்கும்படி இருந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், நடன இயக்குநர் காயத்ரி சொல்லிக் கொடுத்த ஸ்டெப்புகள் அவ்வளவாக நல்லாயில்லை, என்று கூறிய ரசிகர்கள் ஜூனியர்களின் நடனமே நல்லா இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருவதால், காயத்ரி ரொம்பவே அப்செட்டாகியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தாலும் சரி, விருந்தினராக வந்தாலும் சரி காயத்ரியை ரசிகர்கள் விடுவதாக இல்லை.