கஜா புயலையே மிஞ்சும் கவர்ச்சி புயல்! - 7 ஆம் தேதி தமிழகத்தை தாக்குகிறது

வெளிநாட்டு ஆபாசப் படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். சில தமிழ்ப் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் சன்னி லியோன், தமிழ்ப் படம் ஒன்றில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது தங்கை மியா ராய் லியோன், தனது கவர்ச்சியால் விரைவில் கோலிவுட்டையே கலக்கப் போகிறார்.
விமல் மற்றும் ஆஷ்னா சாவேரி ஹீரோ ஹீரோயினாக நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும்’ படத்தில் தான் சன்னி லியோனின் தங்கை மியா ராய் லியோன் அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தராஜ், மன்சூரலிகான், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தில் பூர்ணா முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
நடிகை சர்மிளா மாண்ட்ரே தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்கியுள்ளார்.
ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் மிகவும் பிரபலமானவர் மியா ராய் லியோன் தான். அங்கு அப்படி நடித்த மியாவுக்கு இந்திய சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன், அவரை முதல் முறையாக ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் மூலம் இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்துகிறார்கள்.
பஞ்சமில்லாமல் கவர்ச்சியில் தாரளம் காட்டியிருக்கும் இந்த கவர்ச்சி புயல் மியா ராய் லியோன், கஜா புயலை விட அதிகமான சேதத்தை கோடம்பாக்கத்தில் ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இவருடன் போட்டி போடும் அளவுக்கு இல்லை என்றாலும், படத்தின் ஹீரோயின் ஆஷ்னா சாவேரியும் கவர்ச்சியாக நடித்திருப்பதோடு, காதல் காட்சிகளில் விமலுடன் ரொம்பவே நெருக்கமாகவும் நடித்திருக்கிறாராம்.
கவர்ச்சியான காமெடி படமாக உருவாகியுள்ள ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ வரும் டிசம்பர் 7 ஆம் தேதி வெளியாகிறது.