Aug 28, 2018 02:42 PM

ஹனிமூனில் இருந்து பாதியிலேயே ஓட்டம் பிடித்த நடிகர் - நடிகை சொன்ன தகவல்

ஹனிமூனில் இருந்து பாதியிலேயே ஓட்டம் பிடித்த நடிகர் - நடிகை சொன்ன தகவல்

பாலிவுட்டில் முன்னணி நடிகராக உள்ள அஜய் தேவ்கனும், நடிகை கஜோலும் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்கள். கடந்த 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்ட இவர்களுக்கு நியாசா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். 

 

இந்த நிலையில், தனது திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய நடிகை கஜோல், ஹனிமூனில் இருந்து அஜய் தேவ்கன் பாதியிலேயே ஓட்டம் பிடித்த கதையை சொல்லியிருக்கிறார்.

 

இது குறித்து கூறிய கஜோல், ”திருமணம் செய்யும் முன்பே நான் அஜய்க்கு ஒரு நிபந்தனை விதித்தேன். அதாவது இரண்டு மாதங்கள் ஹனிமூன் செல்ல வேண்டும் என்பது தான் அது. அவரும் சரி என்று கூறினார். ஹனிமூன் போதே உலகை சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்பினேன். அதற்கு அஜயும் சம்மதித்தார்.

 

அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு சென்ற நாங்கள் அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ் வேகாஸ் என்று ஒவ்வொரு இடமாக சென்றோம். பின்னர் கிரிஸுக்கு சென்றோம். அதற்குள் 40 நாட்கள் ஓடிவிட்ட நிலையில், அஜய் அதற்குள்ளாகவே சோர்வடைந்துவிட்டார். ஒரு நாள் காலை, என்னை எழுப்பி தனக்கு காய்ச்சல் மற்றும் தலைவலியாக இருப்பதாக கூறியவர், வீட்டுக்கு சென்றுவிடலாம் என்று கூறினார்.

 

காய்ச்சல் தலைவலி என்றால் மருந்து வாங்கித் தருகிறேன், என்று நான் கூற, ஆனால் அஜய் தொடர்ந்து தனக்கு உடம்பு சரியில்லை என்று மீண்டும் மீண்டும் கூறியவர், ஹனிமூனை ரத்து செய்துவிட்டு வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார்.

 

இதையடுத்து தங்களது ஹனிமூனை பாதியிலேயே முடித்துக் கொண்டு இந்தியா கிளம்ப வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.” என்று தெரிவித்தார்.