Dec 22, 2018 06:05 AM

ரஜினி, விஜய் இடையே நடந்த கடும்போட்டி! - முதலிடத்தில் யார் தெரியுமா?

ரஜினி, விஜய் இடையே நடந்த கடும்போட்டி! - முதலிடத்தில் யார் தெரியுமா?

ரஜினி - கமல் தலைமறைக்கு பிறகு விஜய் - அஜித் என்ற தலைமுறை உருவாகிவிட்டாலும், இன்னமும் ரஜினியும், கமலும் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இவர்கள் அரசியல் உள்ளிட்ட வேறு சில துறைகளில் ஈடுபாடு காட்டுவதாலும், இவர்களது படங்கள் முன்பை போல ரசிகர்களை திருப்திப்படுத்த தவறுவதாலும், இவர்களுக்கான ரசிகர்கள் வட்டம்  குறைந்துவிட்டது.

 

இதற்கிடையே, தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான விஜய் தொடர்ந்து தனது படங்களின் மூலம் வசூலில் மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறார். கடந்த தீபாவளிக்கு வெளியான அவரது ‘மெர்சல்’ மற்றும் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘சர்கார்’ இரண்டுமே தமிழ் சினிமாவின் அதிகம் வசூல் செய்த படங்களின் டாப் 10 பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடித்ததோடு, இன்று வரை அந்த இடத்தை வேறு எந்த படங்களும் பிடிக்கவில்லை.

 

இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் ‘2.0’ உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வந்ததோடு, பல பகுதிகளில் சில படங்கள் வசூலில் செய்திருந்த சாதனைகளையும் முறியடித்தது. அந்த வவகையில், தமிழ்நாட்டு வசூலில் விஜயின் ‘சர்கார்’ முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது ரஜினியின் ‘2.0’ சர்காரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இதற்காக சர்கார் படத்திற்கும் 2.0 படத்திற்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும்போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது ‘2.0’ முதலிடத்தை பிடித்துவிட்டது.

 

தமிழ்நாட்டு வசூலின் டாப் 10 படங்களின் பட்டியல் இதோ,

 

2.0- ரூ. 130 கோடி ( இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது)

சர்கார்- ரூ. 126 கோடி

காலா- ரூ. 59 கோடி

கடைக்குட்டி சிங்கம்- ரூ. 52 கோடி

சீமராஜா- ரூ. 49 கோடி

செக்கச் சிவந்த வானம்- ரூ. 46 கோடி

தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 44 கோடி

வட சென்னை- ரூ. 39 கோடி

Avengers- ரூ. 32 கோடி

இமைக்கா நொடிகள்- ரூ. 29 கோடி