திரிஷாவை காதலித்தேன், டேட்டிங் சென்றோம்! - பிரபல ஹீரோ பேட்டியால் பரபரப்பு

கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் திரிஷா, ‘96’ படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் பிஸியாகியிருக்கிறார். ரஜினிகாந்தின் ‘பேட்ட’ உள்ளிட்ட படங்களில் நடிப்பதோடு, ஹீரோயினுக்கு க்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார்.
பிரசவ காலத்தின் போது மட்டுமே நடிப்புக்கு ஓய்வு கொடுப்பேனே, தவிர மற்றபடி என் உயிர் இருக்கும் வரை நடித்துக் கொண்டு தான் இருப்பேன், என்று பேட்டி ஒன்றில் கூறிய திரிஷா, தனது நடிப்புக்கு முட்டுக்கட்டை போட்டதால் தான், தொழிலதிபர் வருண் மணியனுடனான் திருமணத்தை நிறுத்தினார், என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால், திரிஷாவை பற்றி பலர் அறியாத உண்மை ஒன்று தற்போது வெளி வந்துள்ளது. அதுவும், பிரபல இளம் ஹீரோவே அதை சொல்லியிருக்கிறார்.
அதாவது, திரிஷாவும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோ ராணாவும் காதலித்து வந்ததை அனைவரும் அறிவார்கள். ஆனால், இந்த காதலை இருவரும் மருத்து வந்த நிலையில், திடீரென்று பிரிந்தும் விட்டார்கள். ஆனால், இது குறித்து அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. காரணம், தாங்கள் காதலித்ததை இருவரும் எங்கேயும் கூறியதில்லை.
இந்த நிலையில், நடிகர் ராணா திருஷாவுடனான காதல் குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார். அவர் கூறுகையில், ”இருவரும் நல்ல நண்பர்கள், காதலித்தோம், டேட்டிங் சென்றோம் ஆனால் சில விஷயங்கள் செட் ஆகவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.