Oct 01, 2018 11:13 AM

கவர்ச்சி கலந்த காமெடி படமாக உருவாகும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’!

கவர்ச்சி கலந்த காமெடி படமாக உருவாகும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’!

விமல், ஆஷ்னா சாவேரி நடிப்பில் உருவாகும் படம் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’. சாய் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சார்மிளா மாண்ட்ரே ஆர்.சர்வண் தயாரிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முகேஷ் இயக்குகிறார்.

 

விமல், ஆஷ்னா சாவேரி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் பூர்ணா போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், சிங்கம் புலி, மன்சூரலிகான், லோகேஷ், வெற்றி வேல்ராஜ், ஆத்மா ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதியுள்ளார். வைரபாலன் கலையை நிர்மாணிக்க, கந்தாஸ் நடனம் அமைக்கிறார். தினேஷ் எடிட்டிங்கை கவனிக்க, சுப்ரமணி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.

 

Poorna

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ஏ.ஆர்.முகேஷ் படம் குறித்து கூறுகையில், “வெற்றிவேல் ராஜாவின் மருந்துக் கடையில் வேலை பார்க்கும் விமல், சிங்கம்புலி இருவரும் அதிகப்படியான வருமானத்திற்காக சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ஆனந்தராஜுக்கு சொந்தமான விலை மதிப்பில்லாத ஒரு கடத்தல் பொருள் ஒன்று விமல், சிங்கம் புலி கோஷ்டியிடம் மாட்டிக்கொள்ள அவர்களை ஆனந்தராஜ் குரூப் துரத்த, வழக்கு விசாரணைக்காக போலீஸ் அதிகாரி மன்சூரலிகான், பூர்ணா கோஷ்டி துரத்த, தன் கடையில் கை வைத்து விட்டார்கள், என்று அவர்களை பிடித்தே தீருவது என்று வெற்றிவேல் ராஜா குரூப் துரத்த, ஒரே துரத்தல் மயமாக இருக்கும் இந்த கதையை, கிளாமர் காமெடி என்று கலந்துக்கட்டி சொல்லியிருக்கோம்.” என்றார்.