கல்லூரி மாணவிகளின் கனவை நினைவாக்கிய இளையராஜா!

இசையமைப்பாளர் இளையராஜா தற்போது கல்லூரி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டு பாடல் பாடி வருவதோடு, மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாலும் செய்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் எத்திராஜ் மற்றும் ராணி மேரி கல்லூரிகளின் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட அவர், அங்கே தனது பிறந்தநாளையும் மாணவிகள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார்.
மேலும், நிகழ்ச்சியில் பாட்டு பாடிய இளையராஜா, மாணவிகளுடன் கலந்துரையாடியதோடு, அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரது இசையைப் பற்றியும், இசையில் உள்ள சந்தேகங்கள் குறித்தும் அவரிடம் கேட்டு தெரிந்துக்கொண்ட மாணவிகளில் சிலர், நிகழ்ச்சியில் பாட்டு பாடியதோடு, இளையராஜா இசையில் பாட்டு பாட தாங்கள் விரும்புவதாகவும், அது தங்களது கனவு என்றும் கூறினார்கள்.
இந்த நிலையில், பாட்டு பாட விரும்பிய அந்த இரண்டு கல்லூரி மாணவிகள் சிலரை அழைத்த இளையராஜா, அவர்களிடம் குரல் சோதனை செய்து, அவர்களில் பாடும் திறன் கொண்ட 9 பேரை தேர்வு செய்திருக்கிறார்.
இந்த 9 மாணவிகளும், இளையராஜா இசையமைக்கும் அடுத்தடுத்த படங்களில் பாடகியாக அறிமுகமாக உள்ளனர். இதன் மூலம் மாணவிகளின் கனவை இளையராஜ நினைவாக்கிவிட்டார்.