Dec 24, 2020 10:20 AM

உடல் எடை குறைப்பால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

உடல் எடை குறைப்பால் கீர்த்தி சுரேஷுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், ‘நடிகையர் திலகம்’ படம் மூலம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றதுடன், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவருக்கு திடீரென்று பாலிவுட் சினிமா மீது ஆசை வர அதற்கான தன்னை தயார்ப்படுத்திக் கொண்டார்.

 

அதன்படி, உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்திய கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கில் ‘குட்லக் சகி’ மற்றும் ‘ரங் தே’ ஆகியப் படங்களில் நடித்து வருகிறார். தமிழியில் ‘சாணி காயிதம்’ மற்றும் ‘அண்ணாத்த’ படங்களிலும் மலையாளத்தில் ‘மரக்கர்’ படத்தில் நடித்து முடித்திருப்பவர், இப்படங்களை தவிர வேறு எந்த ஒரு புதுப்படத்திலும் ஒப்பந்தமாகவில்லை.

 

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷுக்கு புதுப்பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை, என்ற தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், அவர் உடல் எடை குறைத்து மிக ஒல்லியாக மாறியதால், அவரை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய தெலுங்கு இயக்குநர்களும், நடிகர்களும் தயக்கம் காட்டுவதாக, தெலுங்கு சினிமாவில் செய்தி வெளியாகி உள்ளது.

 

அதேபோல் தமிழ் சினிமாவில் அவர் ஏற்கனவே ஒப்பந்தமான இரண்டு படங்களை தவிர வேறு எந்த ஒரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகவ்ல்லை. மலையாள சினிமாவிலும் அவருக்கு இதே நிலை தான்.

 

பொதுவாக நடிகைகள் உடல் எடையை குறைத்தால் அவர்களுக்கு புதுப்பட வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், கீர்த்தி சுரேஷ் விஷயத்தில் இது உள்டாவாக நடந்துள்ளது.