Sep 10, 2018 03:04 PM

’சர்கார்’ படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு!

’சர்கார்’ படத்தின் அடுத்த முக்கிய அறிவிப்பு!

விஜயின் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. கடந்த தீபாவளிக்கு தமிழகத்தை மட்டும் இன்றி ஒட்டு மொத்த இந்தியாவையும் மெர்சலாக்கிய ‘மெர்சல்’ படத்தைப் போலவே ‘சர்கார்’ படமும் தனது அறிமுக போஸ்டரிலேயே இந்தியா வரை ரீச் ஆகிவிட்டது.

 

இதற்கிடையே, அரசியல் பின்னணியில் உருவாகும் ‘சர்கார்’ படத்தில் அதிரடி அரசியல் வசனங்கள், கள்ள ஓட்டு, வாக்களர் பாட்டியல் என்று பரபரப்புக்கு பஞ்சமில்லாத பல விஷயங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த தீபாவளி போன்றே, இந்த தீபாவளிக்கும் விஜய் ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம் காத்திருக்கிறது.

 

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி ‘சர்கார்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில், அதே மேடையில் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் டீசரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. அப்படி அது நடந்தால், விஜய் - ரஜினி இருவரும் ஒரே மேடையில் தோன்றுவார்கள். இப்படி ‘சர்கார்’ படம் குறித்து அவ்வபோது முக்கிய அறிவிப்பை வெளியிட்டு வரும் படக்குழு இன்று மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

அதாவது, ‘சர்கார்’ படத்தில் வில்லியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார், தனது டப்பிங் பணியை இன்று முடித்திருக்கிறார். இது குறித்த தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார். 

 

Varalakshmi in Sarkar

 

இவருடன் ராதாரவி, பழ.கருப்பையா ஆகியோரும் அரசியல் வில்லன்களாக நடித்திருக்கும் ‘சர்கார்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.