’பேட்ட’ படத்தில் இருக்கும் முக்கிய அம்சம்! - பிரபல நடிகர் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ‘பேட்ட’ நாளை (ஜனவரி 10) வெளியாக உள்ள நிலையில், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான படத்தின் டிரைலர்.
ரஜினிகாந்த் ரொம்பவே இளமையாக இருப்பதோடு, அதிரடியான காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும் படத்தில் ஏராளமாக இருப்பதோடு, படம் குறித்து தணிக்கை குழு அதிகாரிகள் பாராட்டியது என்று பல விஷயங்களில் பேட்ட படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாபி சிம்ஹா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேட்ட படத்தின் சிறப்பு அம்சம் குறித்து கூறியுள்ளது படத்தின் மீது மேலும் எதிர்ப்பார்ப்பை கூறியிருக்கிறது.
படம் நிச்சயம் வேற மாதிரி இருக்கும். நீங்க படம் பார்க்கும் போது அது தெரியும். தலைவரோட இன்னொரு வெர்சன் வேற லெவல்ல இருக்கும், என்று பாபி சிம்ஹா பேட்டியில் தெரிவித்துள்ளார்.