Dec 26, 2018 11:17 AM

முக்கிய அறிவிப்பு! - ரெடியாகும் லைகா நிறுவனம்

முக்கிய அறிவிப்பு! - ரெடியாகும் லைகா நிறுவனம்

தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாகவும், முதன்மை தயாரிப்பு நிறுவனமாகவும் உருவெடுத்திருக்கும் லைகா புரொடக்‌ஷன்ஸ் பல திரைப்படங்களை தயாரிப்பதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது. முன்னணி ஹீரோக்களின் படங்களை தயாரித்து வரும் இந்நிறுவனம் ஒரே நேரத்தில் பல பெரிய படங்களையும் தயாரித்து வருகிறது.

 

லைகா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘2.0’ வெளியாகி ஒரு மாதம் ஆகப்போகும் நிலையிலும் அப்படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

 

சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவான ‘2.0’ படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், சிறுவர்களின் பேவரைட் படமாக 2.0 உருவெடுத்ததை யாராலும் மறுக்க முடியாது. சிறுவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சென்று பார்த்து மகிழ்ந்த 2.0 படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தொட்ட நிலையில், தற்போது ரூ.1000 கோடியை எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

2pointo

 

இந்த ரூ.1000 கோடி வசூல் குறித்து லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமே விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. முதல் வாரத்தின் வசூலான ரூ.500 கோடி குறித்து அதிகாராப்பூவமாக லைகா நிருவனம் அறிவித்தாலும் அதை சாதாரண பேப்பர் விளம்பரம் மூலமாகவே அறிவித்தது. ஆனால், இந்த 1000 கோடி ரூபாய் வசூல் அறிவிப்பை பிரம்மாண்ட விழா மூலம் அறிவிக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

 

இதற்காக, விரைவில் 2.0 வெற்றி விழாவை நடத்த திட்டமிட்டிருக்கும் லைகா நிறுவனம், அவ்விழாவில் 2.0 ரூ.1000 கோடி வசூல் செய்ததையும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.