Sep 29, 2018 07:19 AM

நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் ரெய்டு! - பின்னணி இது தான்

நடிகர் விஜய் சேதுபதி வீட்டில் ரெய்டு! - பின்னணி இது தான்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் விஜய் சேதுதி. தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் இவரது படங்களில் நல்ல ஓபனிங் இருப்பதால், தயாரிப்பாளர் இவர் கேட்கும் சம்பளத்தை கொடுக்கிறார்கள்.

 

இதற்கிடையே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கும் நிலையில், திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் ‘96’ படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், விஜய் சேதுபதியின் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது விஜய் சேதுபதி வீட்டில் இல்லையாம். படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருக்கிறாராம். விஜய் சேதுபதியின் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டால் தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டது.

 

அதே சமயம், இது வருமானவரித்துறை சோதனை இல்லை என்றும், வழக்கமாக சொத்து கணக்குகளை சரிபார்க்கும் நடைமுறை தான் என்றும் கூறப்படுகிறது.