Jan 01, 2019 09:58 AM
நடிகர் சங்க கல்யாண மண்டபத்திற்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய ஐசரி கணேஷ்!

வேல் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலரும், நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ், நடிகர் சங்க கட்டிடத்திற்குள் கட்டப்படும் திருமண மண்டபகத்திற்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.
ஐசரி கணேஷின் தந்தை ஐசரி வேலன் பெயரில் அமைய உள்ள இந்த திருமண மண்டபம் கட்டுவதற்கு ஆகும் மொத்த செலவையும் ஐசரி கணேஷே ஏற்றுக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், முதல் கட்டமாக ரூ.1 கோடியை தற்போது வழங்கியுள்ளார்.
நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை ஐசரி கணேஷ் சமீபத்தில் வழங்கினார். இதற்காக நடிகர் சங்கம் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளது.