Aug 13, 2019 05:51 AM

பிக் பாஸ் மீரா மிதுனுக்கு அடித்த ஜாக்பாட்! - முன்னணி ஹீரோ படத்தில் இணைந்தார்

பிக் பாஸ் மீரா மிதுனுக்கு அடித்த ஜாக்பாட்! - முன்னணி ஹீரோ படத்தில் இணைந்தார்

பிக் பாஸ் சீசன் 3 யில் போட்டியாளராக கலந்துக் கொண்ட மீரா மிதுன், பிக் பாஸ் வீட்டுக்குள் போவதற்கு முன்பே பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போதும் அதே சர்ச்சையான விவகாரங்களால் பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

 

போலீஸ் விசாரணை, புகார் என்று வெளியே இருந்து வந்த பிரச்சினைகளால் பிக் பாஸ் வீட்டில் சற்று பரபர்ப்பு தொற்றிக் கொண்டாலும், ஒரு வழியாக அந்த பிரச்சினைகளை எல்லாம் மீரா மிதுன் முடித்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் நடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், சேரன் மீது அவர் தேவையில்லாமல் வீன் பழி போட்டதால், மக்களால் அதிகம் வெறுக்கப்பட்டவராகவும் ஆனார்.

 

இதையடுத்து கடந்த மாதம் 28 ஆம் தேதி மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மீரா மிதுன், தினம் ஒரு அப்டேட் என்று சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வந்தவர், சமீபத்தில் பீர் குடித்தவாறே ரசிகர்களுடன் சாட் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால், பீர் குடிப்பது தவறில்லை, என்று மீரா மிதுன் கூலாக பதில் சொன்னார்.

 

இப்படி பரபரப்பை ஏற்படுத்தி கோலிவுட் சினிமாவில் அழுத்தமாக கால் பதிக்க நினைத்த மீரா மிதுனுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் மீரா மிதுன் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறாராம்.

 

மேலும், ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய் இணைந்து நடிக்கும் ‘அக்னி சிறகுகள்’ படத்திலும் மீரா மிதுன் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக ஒப்பந்தமாகியிருக்கிறாராம்.

 

இந்த இரு படங்களை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்திருப்பதால் மீரா மிதுன், குஷியில் பீராக குடித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் கசிந்திருக்கிறது.