Oct 04, 2018 07:20 AM
பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கமல் வைத்த பார்ட்டி!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு முடிவடைந்தது. இதில் நடிகை ரித்விகா போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், இறுதி நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், பிக் பாஸ் 3 தொடங்கப்பட்டால் அதில் தான் பங்கேற்கப் போவதில்லை, என்பதை சூசகமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களுக்கும் கமல்ஹாசன் பார்ட்டி வைத்துள்ளார். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் ரகசியமாக நடத்தப்பட்ட பார்ட்டியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பங்கேற்றனர்.
மேலும், இந்த பார்ட்டியில், கமல் அனைவருக்கும் தன் ஆட்டோகிராப் போட்ட ஒரு விவோ மொபைலை பரிசாக வழங்கியுள்ளார்.