Jan 08, 2019 04:15 PM
முன்னணி நடிகையுடன் ஊர் சுற்றும் கமல்! - போட்டோவால் பரபரப்பு

தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நடிகர் கமல், கட்சிப் பணிகளில் தீவிரம் காட்டும் அதே நேரத்தில், திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறார்.
‘விஸ்வரூபம் 2’ படத்திற்குப் பிறகு பிக் பாஸ் டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க தயாராகி வருவதோடு, விக்ரமை ஹீரோவாக வைத்து படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், சிங்கப்பூரில் நடிகை பூஜா குமாருடன் வீதிகளில் கமல் சுற்றிவருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், ‘இந்தியன் 2’ படத்தின் பணிக்காக கமல் சிங்கப்பூர் சென்றிருப்பதாகவும், அவருக்கு உதவியாக நடிகை பூஜா குமாரும் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.