Apr 21, 2022 05:40 PM

வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘கனா காணும் காலங்கள்’

வெப் சீரிஸாக மீண்டும் வரும் ‘கனா காணும் காலங்கள்’

தொலைக்காட்சி தொடர்களில் டிரெண்ட் செட்டராக இருந்து பல சாதனைகளை படைத்த தொடர் ‘கனா காணும் காலங்கள்’. பள்ளி பருவக் காலத்தை மையமாக வைத்து உருவான இந்த தொடரில் நடித்த நடிகர், நடிகைகள் பலர் சினிமாவில் பிரபல நடிகர், நடிகைகளாக தற்போது வலம் வருகிறார்கள்.

 

இந்த நிலையில், இந்த தொடர்புத்தம் புது பொலிவுடன், புதிய அத்தியாயங்களுடன், புதிய நட்சத்திர பட்டாளத்துடன் வெப் சீரிஸாக மீண்டும் உருவாகியுள்ளது. ’கனா காணும் காலங்கள்’ வெப் சீரிஸ் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது.

 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரத்தில் சிறகுகள் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி நிறுவனர் திரு.சக்திவேல், கடந்த 25 ஆண்டுகளாக பள்ளியை வெற்றிகரமாக நடத்தி, பல தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி கற்பதில் உதவிய அன்பான மனிதர். லாக்டவுன் காரணமாக 2.5 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளியை மீண்டும் திறக்க உற்சாகமாக இருக்கிறார். கதை மனதைக் கவரும் நட்புகள், டீனேஜ் காதல்கள் மற்றும் பழைய பள்ளி மாணவர்களுக்கும் புதிதாக சேரும் கூட்டத்திற்கும் இடையே உருவாகும் போட்டிகளைச் சுற்றி வருகிறது. குறைந்த எண்ணிக்கையிலான மாணவர் சேர்க்கை காரணமாக பள்ளியை மூடுவதற்கான அரசாங்க அறிவிப்பைப் பெறும்போது சக்திவேல் மிகப்பெரிய சவாலை எதிர் கொள்கிறார். பள்ளி நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பள்ளியை மூடுவதில் இருந்து காப்பாற்றுகிறார்கள் என்பதே இந்த  வெப் சீரீஸீன் கதை.

 

தீபிகா வெங்கடாசலம், ராஜா, வெற்றி, பிரபு அரவிந்த் செய்ஜு, தேஜா வெங்கடேஷ் ஆகிய புதுமுக நடிகர்கள் மாணவர்களாக நடிக்க, நடிகர் ராஜேஷ் பள்ளி நிறுவனர் சக்திவேலாக நடிக்கிறார். ராஜ்மோகன் பிடி மாஸ்டராக நடிக்கிறார்.