Oct 09, 2017 07:26 PM

கார்த்திக் - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘Mr சந்திரமெளலி’

கார்த்திக் - கவுதம் கார்த்திக் நடிக்கும் படத்தின் தலைப்பு ‘Mr சந்திரமெளலி’

விஷாலை வைத்து தொடர்ந்து மூன்று படங்கள் இயக்கியுள்ள திரு, தற்போது கவுதம் கார்த்திக்கையும், அவரது தந்தையும் பிரபல நடிகருமான கார்த்திக்கையும் வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். ரெஜினா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 

’Mr சந்திரமெளலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின், டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்கி, ஒரே கட்டமாக முழு படப்பிடிப்பும் முடிவடைய உள்ளது.