Aug 07, 2018 03:09 PM

கருணாநிதியின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடம் - பேருந்து சேவை நிறுத்தம்

கருணாநிதியின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடம் - பேருந்து சேவை நிறுத்தம்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் உடல் நிலை மிக மிக கவலைக்கிடமாக இருப்பதாக காவேரி மருத்துவமனை அறிவித்துள்ளதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

 

மேலும், சென்னை முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டில் வந்திருப்பதோடு, டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டு விட்டது.

 

இந்த நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ஆம்னி பேருந்துகளின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.