Jun 03, 2020 05:37 AM

”தமிழர்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” - இயக்குநர் சுசீந்திரன்

”தமிழர்களின் உண்மையான தலைவர் கருணாநிதி” - இயக்குநர் சுசீந்திரன்

மறைந்த முன்னால் முதல்வரும்,  திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 97 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. கொரோனா ஊரடங்கினால் திமுக தொண்டர்கள் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

 

இந்த நிலையில், இயக்குநர் சுசீந்திரன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கலைஞரின் பிறந்தநாளுக்காக வெளியிட்டுள்ள பதிவில், தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழர்களின் உண்மையான தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 97 வது பிறந்தநாள் இன்று...

 

தமிழன் இந்த பூமியில் வாழும்வரை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சாதனை சுவடுகள் என்றும் மறையாது...

 

நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த நற்தொண்டுகளை என்றும் நினைவில் கொள்வோம்...

 

உங்களை வணங்குகிறோம்.

 

சுசீந்திரன் மற்றும் இடும்பத்தினர்.” என்று தெரிவித்துள்ளார்.

 

Karunanithi in Naan Mahan Alla team