Nov 23, 2018 04:21 AM

கல்லூரி ஊழியரின் அசிங்கமான செயல்! - பொங்கி எழுந்த கஸ்தூரி

கல்லூரி ஊழியரின் அசிங்கமான செயல்! - பொங்கி எழுந்த கஸ்தூரி

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி, நாட்டில் எந்த விஷயம் நடந்தாலும் அது பற்றிய தனது கருத்தை தைரியமாகவும், வெளிப்படையாகவும் கூறி வருகிறார். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நடிகர் நடிகை என யார் தவறு செய்தாலும், அவர்களை தைரியமாக விமர்சித்துவிடுகிறார்.

 

இந்த நிலையில், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஊழியர் ஒருவர், மாணவி முன்பு செய்த அசிங்கமான செயலுக்காக கஸ்தூரி பொங்கி எழுந்துள்ளார்.

 

சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் மழையில் நனைந்த உடையுடன் மாணவி ஒருவர் லிப்டில் பயணித்துள்ளார். அப்போது உள்ளே இருந்த ஊழியர் ஒருவர், அவரின் கவர்ச்சியை கண்டு அங்கேயே சுய இன்பம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி அலறியுள்ளார்.

 

மேலும், இது குறித்து மாணவி ஹாஸ்டல் வார்டனிடம் புகார் கூறிய போது, ”நீங்கள் அணியும் இதுபோன்ற உடைகளால் தான் இப்படியான பிரச்சனைகள் வருகிறது” என்று வார்டன்  கூறியுள்ளார். வார்டனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து, மாணவிகள் நீதி கேட்டு உள்ளேயே போராட்டம் செய்துள்ளனர்.

 

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக ஊழியரின் இந்த அசிங்கமான செயலுக்கும், ஹாஸ்டல் வார்டனின் இத்தகைய கருத்துக்கு நடிகை கஸ்தூரி எதிர்ப்பு தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இதோ அந்த பதிவு,