Aug 23, 2018 08:16 AM

பிக் பாஸ் போட்டியாளருக்கு அடி உதை! - நடவடிக்கை எடுப்பாரா கமல்?

பிக் பாஸ் போட்டியாளருக்கு அடி உதை! - நடவடிக்கை எடுப்பாரா கமல்?

முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் பிக் பாஸ் விறுவிறுப்பாக இல்லை, என்ற மக்களின் கருத்தை பொய்யாக்கும் விதத்தில் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்ற, போட்டியாளர்கள் பல்வேறு முயற்சிகளை செய்து வந்தாலும் எதுவும் எடுபடாமல் போகிறது.

 

இதற்கிடையே, வைல்ட் கார்டு மூலம் நிகழ்ச்சியில் புதிய போட்டியாளர்களாக யார் அறிமுகமாக போகிறார்கள், என்ற எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்க, தற்போது இருக்கும் போட்டியாளர்களிடம் ஏற்படும் மோதல், அந்த நிகழ்ச்சிக்கே முற்றுப்புள்ளி வந்துவிடும் போல தோன்றுகிறது.

 

இன்று காலை வெளியான புரோமோவில், பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவம் பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Big Boss Mahath

 

ஒவ்வொரு டாஸ்க்கிலும் காட்டு மிராண்டித்தனமான நடந்துக் கொள்ளும் மஹத், இன்று கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் விளையாடும் போது சக போட்டியாளரை அடித்துவிடுகிறார். இதனால், பிக் பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

வெறித்தனமாக விளையாடும் மஹத், எதிரணியினரை காட்டு மிராண்டித்தனமாக தாக்குவது போல தோன்றும் அந்த புரோமோவில், குறிப்பாக டேனியலை அவர் தாக்குவிடுவதாகவும் தெரிகிறது. உடனே கோபப்படும் டேனியல், கேமரா முன்பு வந்து, “அவன் என்னை அடித்துவிட்டான், இனி சும்மா இருக்க மாட்டேன் பிக்பாஸ்” என்று கூறுகிறார்.

 

Big Boss Daniel

 

அவர் அப்படி கூறிய பிறகு, பதிலுக்கு அவர் மஹத்தை அடித்தாரா அல்லது சண்டை சமாதானமாக போய்விட்டதா, என்பது தெரியவில்லை. எப்படியோ, இன்றைய பிக் பாஸில் பெரும் கலவம் காத்திருப்பது மட்டும் தெரிகிறது.