May 23, 2020 08:28 AM

கொரோனாவால் ஏற்பட்ட வறுமை! - மாஸ்க் வியாபாரத்தில் ஈடுபடும் கோலிவுட் நடிகர்கள்

கொரோனாவால் ஏற்பட்ட வறுமை! - மாஸ்க் வியாபாரத்தில் ஈடுபடும் கோலிவுட் நடிகர்கள்

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுமார் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், பலர் வறுமையில் சிக்கியுள்ள நிலையில், சினிமா தொழிலாளர்களும், துணை நடிகர் மற்றும் நடிகைகளும் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள்.

 

இதற்கிடையே, இந்தி திரைப்படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்த சோலங்கி திவாகர் என்பவர், படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் ஏற்பட்ட வறுமையால் தற்போது சாலைகளில் பழம் விற்கிறார், என்ற செய்தி வைரலாகி வரும் நிலையில், தமிழ் சினிமாவை சேர்ந்த துணை நடிகர்கள் சிலர், தங்களது வறுமையை போக்க மாஸ்க் விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

 

மாதத்தில் பாதி நாட்கள் கூட படப்பிடிப்பு இல்லாமல் கஷ்ட்டப்படும் துணை நடிகர்கள் தமிழ் சினிமாவில் ஏராளம். இருந்தாலும் சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் எத்தனை கஷ்ட்டங்கள் வந்தாலும் தொடர்ந்து பயணிப்பவர்கள், தற்போதைய கொரோனா காலத்தில் நிலைகுலைந்து போய்விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

 

சினிமா பிரபலங்கள் பலர் கஷ்ட்டப்படும் துணை நடிகர்கள் மற்றும் உதவி இயக்குநர்களுக்கு பல வகையில் உதவி செய்து வந்தாலும், அவர்களின் அத்தியாவாசிய தேவைகள் முழுமையாக பூர்த்தியாகவில்லை என்பது தான் உண்மை.

 

இந்த நிலையில், பல தமிழ்ப் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வரும் துணை நடிகர்கள் சிலர் சாலைகளில் மாஸ்க் விற்பனை செய்து வருகிறார்களாம். இதன் மூலம், நாள் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கிடைக்கிறதாம். இந்த தொகை மூலம் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளும் இந்த துணை நடிகர்கள், கொரோனவால் பாதிக்கப்பட்டாலும், அதே கொரோனாவால் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான வழியையும் கண்டுபிடித்திருப்பது பாராட்டுக்குரியது தான்.

 

Mask Sale