Oct 24, 2018 11:41 AM

‘கூத்துப்பட்டறை’ நிறுவனர் முத்துசாமி மரணம்!

‘கூத்துப்பட்டறை’ நிறுவனர் முத்துசாமி மரணம்!

நடிகர்கள், நடிகைர் பலரை உருவாக்கிய ‘கூத்துப்பட்டறை’ நடிப்பு பயிற்சி பள்ளியின் நிறுவனர் நா.முத்துசாமி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

 

உடல் நலக்குறைவால் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்த நா.முத்துசாமி, இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

தஞ்சை மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்த நா.முத்துசாமி, தெருக்கூத்து மூலம் பிரபலமானவர். பத்மஸ்ரீ விருது, இந்திய அரசின் சங்கீத அகடாமி விருதை உள்ளிட்ட பல விருதுகளை பெற்றிருக்கும் நா.முத்துசாமி கூத்துப்பட்டறை மூலம் விஜய் சேதுபதி, விமல், விதார்த்,  பசுபதி உள்ளிட்ட பல நடிகர்களை உருவாக்கியார் ‘வாழ்த்துக்கள்’ என்ற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.

 

முத்துச்சாமி எழுதிய நா.முத்துசாமி கட்டுரைகள் என்ற நூல் 2005-ஆம் ஆண்டில் தமிழக அரசு விருதை வென்றது. 

 

நா.முத்துசாமியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.