சிம்புக்கு அத்தையான குஷ்பு!

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை முடித்துவிட்ட சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ படத்தில் நடித்து வரும் நிலையில், சுந்தர்.சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு பவன் கல்யாண் இயக்கத்தில் வெளியாகை மாபெரும் வெற்றிப் பெற்ற தெலுங்குப் படமான ‘அத்தரண்டிகி தாரேதி’ படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம். இப்படத்தின் தெலுங்குப் பதிப்பில் சமந்தா, பிரணிதா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்க, நதியா, பொமன் இரானி, பிரம்மானந்தம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள். அதிலும் நதியா ஹீரோவுக்கு அத்தையாக வலுவான வேடத்தில் நடித்திருந்தார்.
தற்போது தமிழில் உருவாகும் இப்படத்தில் சமந்தா நடித்த வேடத்தில் மேகா ஆகாஷ் நடிக்க, பிரணிதா வேடத்திற்கான நடிகை தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வலுவான அத்தை வேடத்திற்கு குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (செப்.17) ஜார்ஜியாவில் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.