சொகுசு கார், ஆடம்பர வீடு! - ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை மாற்றிய சவுண்ட் பார்ட்டி

ஆந்திராவை சேர்ந்த நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு சினிமா நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியதோடு, தனக்கு பட வாய்ப்பு கூறுவதாக சொல்லி, தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறினார். மேலும், தெலுங்கு நடிகர் சங்கத்திற்கு எதிராக நிர்வாண போராட்டம் நடத்தியும் பீதியை ஏற்படுத்தினார்.
ஆனால், ஸ்ரீரெட்டியில் தொடர் பாலியல் புகார்களை தெலுங்கு ஊடகங்கள் கண்டுகொள்ளாத நிலையில், தமிழ் சினிமாவை நோக்கி வந்த ஸ்ரீரெட்டி, சென்னையில் இருந்தபடி தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடுவதோடு, தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் பாலியல் புகார் கூறினார். பிரபல இயக்குநர்கள், நடிகர்கள் என்று ஸ்ரீரெட்டி தமிழ் சினிமாவின் முக்கிய தலைகள் பற்றி பரபரப்பு புகார் கூற, கோடம்பாக்கமே பற்றி ஏரிந்தது.
இதற்கிடையே, ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுப்பதாக ஒரு கூட்டம் கிளம்ப, அதில் ஸ்ரீரெட்டியே நடிக்கவும் ஒப்புக்கொண்டார். மேலும், ஸ்ரீரெட்டி புகார் கூறிய ராகவா லாரன்ஸும், அவருக்கு தனது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்தார். இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற்று வரும் ஸ்ரீரெட்டி, கோடம்பாக்கத்தின் முக்கிய நடிகைகளில் ஒருவராக விரைவில் உருவெடுக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஆம், ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக முக்கிய புள்ளி இருக்கிறாராம். அதனால் தான், தமிழ் சினிமாவில் அவருக்கு பல வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளதாம். மேலும், யார் யார், எங்கு, என்னவெல்லாம் செய்தார்கள் என்பது குறித்த ஆதாரம் தன்னிடம் இருக்கிறது, அதை ஒவ்வொன்றாக வெளியிடுவேன், என்று ஸ்ரீரெட்டி கூறியதாலும் அவருக்கு பட வாய்ப்புகள் வழங்கப்படுவதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
அதேபோல், ஸ்ரீரெட்டியும் தற்போது பட வாய்ப்புகள் கிடைத்ததால், பாலியல் புகார்கள் எதுவும் கூறாமல், தனது வேலையில் கண்ணும் கருத்தமாக இருக்கிறாராம்.
இந்த நிலையில், சொகுசு கார், ஆடம்பரமான வீடு என்று ஸ்ரீரெட்டியின் வாழ்க்கையே தற்போது மாறிவிட்டதாம். சாப்பாட்டுக்கே வழியில்லை என்று புலம்பிய ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை தரத்தையே தமிழ சினிமா மாற்றிவிட்டது, என்று கோடம்பாக்கம் முழுவதுமே பேசப்பட்டு வருகிறது.