Nov 20, 2018 01:33 PM
கஜா புயல் நிவாரண நிதியாக ஒரு கோடி ரூபாய் வழங்கும் லைகா நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் ரஜினி, கமல், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வருவதோடு, பல படங்களை விநியோகமும் செய்து வருகிறது.
இந்நிறுவனம் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ரஜினிகாந்தின் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘2.0’ வரும் நவம்பர் 29 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,01,00,000 (ரூபாய் ஒரு கோடியே ஒரு லட்சம்) நிதி வழங்க இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிதி, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.