Sep 26, 2018 11:52 AM

யோகி பாபுக்கு ஜோடியான மனிஷா யாதவ்!

யோகி பாபுக்கு ஜோடியான மனிஷா யாதவ்!

’ஒரு குப்பைக் கதை’ படத்திற்கு பிறகு கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் மனிஷா யாதவ், அடுத்ததாக ‘சண்டி முனி’ என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார். 

 

சிவம் மீடியா ஒர்க்ஸ் என்ற நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் ‘சண்டி முனி’ படத்தில் ஹீரோவாக நட்ராஜ் நடிக்க, ஹீரோயினாக மனிஷா யாதவ் நடிக்கிறார். மிக மிக முக்கியமான வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். வில்லனாக ஸ்டண்ட் இயக்குநர் சூப்பர் சுப்பராயன் நடிக்கிறார். இவர்களுடன் மயில்சாமி, ஆர்த்தி, வாசு விக்ரம், முத்துக்காளை, சூப்பர் குட் சுப்பிரமணி, கிரேன் மனோகர், அஞ்சலி தேவி, சீனியம்மாள், பாபு பாய், பூபதி, விசித்திரன், குள்ள செந்தில், சாந்தி, ஆனந்த் ஆகியோர் நடிக்கிறார்கள்.

 

செந்தில் ராஜகோபல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரிஷால் சாய் இசையமைக்க, புவன் எடிட்டிங் செய்கிறார். முத்துவேல் கலையை நிர்மாணிக்க, வா.கருப்பன் பாடல்கள் எழுதுகிறார். பிருந்தா, தினேஷ், சிவா லாரன்ஸ், சிவா ராக் ஆகியோர் நடனம் அமைக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை சூப்பர் சுப்பராயன் வடிவமைக்கிறார்.

 

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மில்கா எஸ்.செல்வகுமார் இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் ராகவா லாரன்ஸிடம் ‘முனி 3’, ‘காஞ்சனா 2’ ஆகியப் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு நாளை பழனியில் தொடங்கி, தொடர்ந்து 45 நாட்கள் பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறுகிறது.

 

இப்படத்தில் நட்ராஜ் ஹீரோ என்றாலும், யோகி பாபு மனிஷா யாதவுக்கு தாலி கட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதே சமயம், நட்ராஜும் மனிஷாவுக்கு தாலி கட்டுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளதால், மனிஷா யாருக்கு தான் ஜோடி, என்ற ரீதியில் இப்படம் தற்போது ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Sandi Muni

 

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டதற்கு, “இது ஒரு ஹாரர் படம். நட்ராஜ் சண்டி என்கிற சிவில் இஞ்சினீயர் வேடத்தில் நடிக்கிறார். மனிஷா யாதவ் ராதிகா என்ற ஆசிரியையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹாரர் காமெடியுடன் பேமிலி சப்ஜெக்ட்டாக சண்டிமுனி உருவாகிறது.

 

ஒரு பெண்ணுக்கும் பேய்க்கும் இடையே நடக்கும் போர்க்களும், இவர்கள் இருவருக்கிடையே மாட்டிக் கொண்டு முழிக்கும் சண்டி என்கிற நட்ராஜ் கதாபாத்திரம். படம் சுவாரஸ்யமாகவும், திகிலாகவும் இருக்கும்.

நான் பாடம் கற்றுக் கொண்ட இடம் அப்படி. ஒவ்வொரு காட்சியுமே கமர்ஷியல் கலக்கலாக இருக்கும்.” என்று தெரிவித்தார்.