Dec 07, 2018 06:15 AM

மகனை வைத்து ‘ஏ’ படம் எடுத்த மன்சூரலிகான்!

மகனை வைத்து ‘ஏ’ படம் எடுத்த மன்சூரலிகான்!

நடிகர் மன்சூரலிகான் இயக்கி, நடிக்கும் படம் ‘கடமான் பாறை’. மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் ஹீரோவாக அறிமுகமாகும் இப்படத்தை ராஜ்கென்னடி பிலிம்ஸ் நிறுவனம் மூலம் மன்சூரலிகான் தயாரிக்கிறார். ஹீரோயின்களாக அனுராகவி, ஜெனி பெர்னாண்டஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சிவசங்கர், சார்மி, தேவி தேஜு, பிளாக் பாண்டி, அமுதவாணன், முல்லை, கோதண்டம், பழனி, கனல் கண்ணன், போண்டாமணி, பயில்வான் ரங்கநாதன், லொள்ளுசபா மனோகர், வெங்கல் ராவ், ஆதி சிவன், விசித்திரன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

 

மகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ரவிவர்மா இசையமைத்திருக்கிறார். விவேகா, சொற்கோ, டோலக் ஜெகன், ரவிவர்மா, மன்சூரலிகான் ஆகியோர் பாடல்கள் எழுத, ஜெயகுமார் கலையை நிர்மாணித்துள்ளார். டாக்டர்.சிவசங்கர், சம்பத்ராஜ், சங்கர், சந்தர், சந்துரு, சிவா ஆகியோர் நடனம் அமைக்க, ராக்கி ராஜேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

 

இப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

 

இது குறித்து கூறிய மன்சூரலிகான், “நான் எதிர்ப்பார்த்தது தான். என் படத்தில் என்ன கமர்ஷியல் இருக்க வேண்டுமோ, அது இருக்கிறது. அதனால் ஏ தான் கிடைக்கும் என்று நினைத்திருந்தேன், சரியாக கிடைத்திருக்கிறது. படத்தில் காதல், மோதல், காமெடி எல்லாம் இருக்கும்.” என்றார்.