Oct 17, 2017 06:18 PM

‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த கட் எத்தனை தெரியுமா?

‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த கட் எத்தனை தெரியுமா?

தொடர் சாதனைகளை செய்து வரும் ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய சோதனை வந்தது அனைவருக்கும் அறிந்ததே. இதையடுத்து நேற்று நடைபெற்ற வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டத்தில், ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டது.

 

அந்த சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்த பிறகே படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படும், சென்சார் சான்றிதழ் கிடைத்தால் தான் படம் ரிலீஸாகும் என்பதால், ’மெர்சல்’ படக்குழு படபடப்பிலே இருந்தனர்.

 

தடையில்லா சான்றிதழை சென்சார் குழுவிடம் ஒப்படைத்தாலும், இன்று மத்தியம் வரை படக்குழுவினர் கைக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இருந்தாலும், பல திரையரங்குகளில் டிக்கெட் முன் பதிவு தொடங்கியது.

 

இந்த நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் ‘மெர்ச’ படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பு தரப்புக்கு கிடைத்தது. இதனையடுத்து தயாரிப்பு தரப்பினர் நிம்மதியடைந்தனர்.

 

மேலும், படத்தின் 5 இடங்களில் கட் கொடுத்த சென்சார் குழு, படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. கட்டுகள் பல வாங்கியும், ‘மெர்சல்’ படத்தின் நீளம் 170.08 ஆக உள்ளது. அதாவது, 2 மணி நேரம் 50 நிமிடமாகும், கிட்டதட்ட 3 மணி நேர படமாக மெர்சல் உள்ளது.