Aug 25, 2018 06:30 AM

நாஞ்சில் பி.சி.அன்பழகன் எழுதிய எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் - முதல்வர் வெளியிட்டார்

நாஞ்சில் பி.சி.அன்பழகன் எழுதிய எம்.ஜி.ஆர் பற்றிய புத்தகம் - முதல்வர் வெளியிட்டார்

திரைப்பட இயக்குநரும் அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

 

‘காமராசு’, ‘அய்யா வழி’ உள்ளிட்ட பல படங்களை இயக்கி தயாரித்திருக்கும் இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன், அதிமுக-வின் நட்சத்திர பேச்சாளராகவும் இருக்கிறார். இவர் ‘அரிதார உலகில் அரிதாக வந்த அவதாரமே எம்.ஜி.ஆர்!’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

 

இந்த புத்தகம் வெளியீட்டு விழா சமீபத்தில் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புத்தகத்தை வெளியிட, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார்.

 

இந்த நிகழ்வில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.