Nov 26, 2018 06:05 AM

விஜய்க்கு நயந்தாரா ஓகே சொல்ல இது தான் காரணம்!

விஜய்க்கு நயந்தாரா ஓகே சொல்ல இது தான் காரணம்!

‘தெறி’, ‘மெர்சல்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநட் அட்லீ விஜயுடன் மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறார். விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க நயந்தாராவிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்த நிலையில், மேலும் சில ஹீரோயின்களும் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியானது.

 

இதற்கிடையே, விஜயின் 63 வது படத்தில் நயந்தாரா ஹீரோயினாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். இதை தயாரிப்பு தரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது.

 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் நயந்தாரா, முன்னணி ஹீரோக்கள் படங்களில் ஹீரோயினுக்கு போதிய வாய்ப்பு கொடுக்கப்படுவதில்லை, என்பதால் ஹீரோக்கள் படங்களை நிராகரித்து வந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜுத்துடன் நடிக்க சம்மதித்தார். அதை தொடர்ந்து விஜய் படத்திலும் அவரை ஹீரோயினாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

 

நயந்தாராவிடம் பேச்சுவார்த்தை தொடங்கியவுடன் அவர் கேட்ட சம்பளத்தால் தயாரிப்பு தரப்பு வேறு ஹீரோயினை பார்க்கும்படி இயக்குநரிடம் கூறினாலும், ஆனால், இயக்குநர் அட்லீ, நயந்தாரா தான் வேண்டும் என்பதில் விடாபிடியாக இருந்ததோடு, விஜயிடமும் நயந்தாரா நடித்தால் தான் நன்றாக இருக்கும், என்று கூறினாராம்.

 

இதனை தொடர்ந்து விஜயுடம், தயாரிப்பு தரப்பிடம் நயந்தாராவை போடும்படி கூற, தயாரிப்பு தரப்பும் வேறு வழி இல்லாமல் நயந்தாரா கேட்ட பெரும் தொகையை கொடுக்க சம்மதித்ததால், நயந்தாராவும் ஓகே சொல்லிவிட்டாராம்.