Oct 01, 2020 03:11 PM

நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள்! - போலீசிடம் வசமாக சிக்கிய பிரபல நடிகை

நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள்! - போலீசிடம் வசமாக சிக்கிய பிரபல நடிகை

மீ டூ விவகாரத்தை மிகப்பெரிய அளவில் சினிமா நடிகைகள் எடுத்துச் சென்றனர். உலகம் முழுவதும் இந்த பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையே, இந்திய சினிமாத் துறையில் போதைப் பொருள் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பதோடு, இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பிரபல கன்னட சினிமா நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களது ஜாமீன் மனுக்களும் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது.

 

தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உள்ள ரகுல் ப்ரீத் சிங்கிடமும் போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள போலீசார், மேலும் பல பிரபலங்களிடமும் இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

 

இந்த நிலையில், சிறையில் இருக்கும் நடிகைகள் ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோரது செல்போன்களில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள் இருக்குமா என்பதை அறிய, இருவரின் செல்போன்களையும் ஆய்வு செய்துள்ளனர். அப்போது போனில் இருந்து அழிக்கப்பட்ட தகவல்களை ரிக்கவரி செய்து ஆய்வு செய்த போது, அதில் ஆபாச புகைப்படங்களும், வீடியோக்களும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Sanjana Galrani and Ragini Dwivedi

 

குறிப்பாக நடிகை சஞ்சனா கல்ராணியின் போனில் பாலியல் தொடர்பான ஒரு வாட்ஸ்-அப் குரூப் இருந்ததாகவும், அவர் கைதானவுடன் அந்த குழு கலைக்கபட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போதைப் பொருள் வழக்கு தொடர்பாக விசாரிக்கப்பட்டு வந்த சஞ்சனா கல்ராணி மற்றும் ராகினி திவேதி, தற்போது பாலியல் விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்கப்பட இருக்கிறார்களாம்.