மிஷ்கின் என்னை ஏமாற்றிவிட்டார்! - கதறும் புதுமுக நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கும் மிஷ்கின், தற்போது உதயநிதியை வைத்து ‘சைக்கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் தலைப்பு சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அறிமுக நடிகரான மைத்ரேயா என்பவர், சைக்கோ படத்தின் கதையை தனக்காக உருவாக்குவதாக கூறி இயக்குநர் மிஷ்கின் தன்னிடம் பணம் பெற்றுக் கொண்டு, தற்போது அந்த படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கிறார், என்று குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் மைத்ரேயன், அதில் இயக்குநர் மிஷ்கின் என்னிடம் பணம் வாங்கிக்கொண்டு சைக்கோ படத்தில் என்னை நடிக்க வைப்பதாக கூறினார். ஆனால், தற்போது என்னை ஏமாற்றிவிட்டு, சைக்கோ படத்தை வேறு ஒரு நடிகரை வைத்து எடுக்கிறார், என்று தெரிவித்திருக்கிறார்.
சாந்தனுவை வைத்து ஒரு படத்தை எடுக்க இருந்த மிஷ்கின், திடீரென்று சாந்தனுவை மாற்றிவிட்டு உதயநிதியை வைத்து படத்தை தொடங்கிய நிலையில், தற்போது அந்த படம் தொடர்பாக அறிமுக நடிகர் ஒருவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.