Mar 19, 2021 06:56 AM

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்ரா தற்கொலை! - புதிய தகவலால் பரபரப்பு

மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சித்ரா தற்கொலை! - புதிய தகவலால் பரபரப்பு

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நடிகையுமான விஜே சித்ரா, தற்கொலை சம்பவம் திரையுலகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக அவரது பெற்றோர்களும், நண்பர்களும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

 

தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையும், ஆர்.டி.ஓ-வும், சித்ராவின் மரணம் தற்கொலை தான், என்று அறிக்கை சமர்ப்பித்ததோடு, அவரை தற்கொலைக்கு தூண்டியது அவருடைய கணவர் ஹேமந்த் தான் என்றும் தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

 

மேலும், ஹேமந்த் குறித்து அவரது நண்பர்கள் சிலர் வெளியிட்ட சில தகவல்கள் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், சித்ரா வைத்திருந்த வெளிநாட்டு பணம், வைர மோதிரம் போன்ற பொருட்கள் காணவில்லை, என்று அவரது பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.

 

சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவ்வபோது புது புது தகவல்கள் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சித்ரா குறித்தும் அவரது மரணம் குறித்தும் யாரும் பேசுவதில்லை.

 

இந்த நிலையில், சித்ரா தற்கொலை செய்துக் கொண்ட விடுதி அறையை சென்று அவரது பெற்றோர்கள் பார்த்துள்ளனர். அப்போது, கட்டிலுக்கும், மின் விசிறிக்கும் இடையே நிற்கும் தூரம் தான் இருப்பதாக கூறியவர்கள், ஹேமந்த் தான் சித்ராவை ஏதோ செய்துவிட்டு, ஜன்னல் வழியாக தப்பித்துள்ளார், என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

சித்ரா பெற்றோர்களின் இந்த புதிய தகவலால், சித்ரா தற்கொலை விவகாரத்தில் மீண்டும் சர்ச்சை கிளம்பியிருக்கிறது.