Aug 29, 2018 06:09 AM

என்.டி.ஆரின் மகன் சாலை விபத்தில் மரணம்!

என்.டி.ஆரின் மகன் சாலை விபத்தில் மரணம்!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவின் மகனும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் தந்தையுமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.

 

நலகொண்டா மாவட்டத்தில் உள்ள நர்கெட்பள்ளி - அட்டன்கி நெடுஞ்சாலையில் காரில் சென்ற போது, ஹரிகிருஷ்ணாவின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

இதில் படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

 

Hari Krishna and Junior NTR

 

உயிரிழந்த ஹரிகிருஷ்ணா தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவை எம்.பி யாகவும் பணியாற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.