ஏமாற்றத்தால் விரக்தியடைந்த ஓவியா! - இமயமலைக்கு போகப்போகிறாராம்

’பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமான நடிகையாகிவிட்ட ஓவியா, தற்போது ‘களவாணி 2’, ‘90 எம்.எல்’, ‘காஞ்சனா 3’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் பல படங்களில் நடிப்பது குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வரும் அவர், என்னதான் பிஸியாக இருந்தாலும், ஒரு பக்கம் பெரும் வருத்தத்திற்கும் ஆளாகியிருக்கிறார்.
அதாவது, சிறு சிறு வேடங்களில் ஓவியா நடித்திருந்தாலும், பலர் அவரது பெயரை சொல்லியே விளம்பரம் தேடுகிறார்களாம். மேலும், பல பொருட்களில் ஓவியாவின் படங்களை அச்சிட்டும் விளம்பரம் செய்கிறாரக்ளாம். இதுபோன்ற நடவடிக்கையால் ஓவியா ரொம்பவே விரக்தியடைந்துவிட்டாராம்.
ஒரே இரவில் தான் பெரிய ஆளாகிவிட்டதாக பலர் நினைக்கிறார்கள், அது ஒரு வகையில் உண்மை தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். அதே சமயம், இந்த இடத்திற்கு வருவதற்கு பெரிய கஷ்ட்டங்களையும், பெரும் துன்பங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன், என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது ஆதங்கத்தை ஓவியா வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும், இந்த புத்தாண்டை எப்போதும் போல தனது நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருக்கும் ஓவியா, அப்படியே தனக்கு பிடித்த இமயமலை பயணத்தையும் மேற்கொள்ள இருக்கிறாராம்.