Nov 26, 2018 08:19 AM

கின்னஸில் இடம்பிடித்த தமிழர்களின் ஒயிலாட்டம்!

கின்னஸில் இடம்பிடித்த தமிழர்களின் ஒயிலாட்டம்!

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ஒயிலாட்டம் கின்னஸ் சாதனையில் நேற்று இடம்பிடித்துள்ளது. 

கின்னஸ் சாதனியில் இடம்பெறுவதற்காக நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஒயிலாட்டம் நிகழ்வு, சென்னை அருகே உள்ள திருநின்றவூரில் ஜெயா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 8 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை ஒயிலாட்டம் நிகழ்வில் 1415 க்கும் மேற்பட்டவர்கள் ஆடினார்கள். இந்த  சாதனை நிகழ்வினை நடத்த பின்னணி பாடகர் வேல்முருகனும், ஸ்வரங்களின் சங்கமம் அமைப்பினரும் ஜெயா கல்லூரி நிர்வாகமும் ஏற்பாடு  செய்திருந்தனர்.

 

Oyilattam Guinness Record

 

இந்த சாதனை நிகழ்வில் தமிழக அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், இசையமைப்பாளர்கள் கங்கைஅமரன், ஜேம்ஸ்வசந்தன், கவிஞர் பிறைசூடன், நடிகர்கள் தம்பிராமையா, வேல்சிவா,  பி.ஆர்.ஓ,யூனியன் தலைவர் விஜயமுரளி, கலாவேல்முருகன், சௌமியாராஜேஷ், கின்னஸ் குழு சார்பில் விவேக்

ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.