Jan 04, 2019 09:51 AM

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’!

பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’!

‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்திற்கு ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

 

‘அட்ட கத்தி’ தினேஷ்  ஹீரோவாக நடிக்கும் இப்படத்தினை, பா.ரஞ்சித்திடம் உதவியாளராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்குகிறார்.

 

‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ இசைக்குழு மூலம் மக்களிடம் பிரபலமான தென்மா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘காலா’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றிய த.ராமலிங்கும் இப்படத்தின் கலை இயக்குநராக பணியாற்றிய, கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. இயக்குநர்கள் பா.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜ் ஆகியோர் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்கள்.