Jan 20, 2019 06:41 AM

சத்தமில்லாமல் சாதித்த ‘பிரான்மலை’!

சத்தமில்லாமல் சாதித்த ‘பிரான்மலை’!

சிறிய படங்கள் பெரிய வெற்றி பெறுவது, தமிழ் சினிமாவில் அவ்வபோது நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது என்றாலும், இதுபோன்ற சிறிய படங்களுக்கு பின்னணியில் சில பெரிய மனிதர்கள் இருப்பதாலும் இது சாத்தியமாகிறது. அப்படி தான் ‘காதல்’, ‘மைனா’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல சிறிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

 

ஆனால், எந்தவித பின்புலமும் இல்லாமல், நல்ல படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், என்ற எண்ணத்தில் தொடர் போராட்டத்தின் மூலம் தனது ‘பிரான்மலை’ படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கிறார் அறிமுக ஹீரோ வர்மன்.

 

சாப்ட்வேர் துறையை சேர்ந்த வர்மன், சினிமா மீது உள்ள ஆர்வத்தினால் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்குள் நுழைந்தவர், கெளரவ கொலையை மையமாக வைத்து உருவான ‘பிரான்மலை’ மூலம் ஹீரோவானவர், முதல் படத்திலேயே தனது நடிப்பால் அனைவரிடமும் சபாஷ் வாங்கிவிட்டார்.

 

எளிமையான கதையாக இருந்தாலும் அதை வலிமையாக சொன்னதால் ரசிகர்களிடமும், ஊடகங்களிலும் பிரான்மலை மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இருப்பினும், தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்கும் யூடியூப் மீடியா நண்பர்கள், “நாங்கள் பெரிய படத்திற்கு தான் விமர்சனம்” செய்வோம் என்ற கொள்கையோடு பிரான்மலை படத்தை பார்க்கவே தவிர்த்துவிட்டார்கள். இருப்பினும் இணையதள நிருபர்களும், பத்திரிகை நிருபர்களும் படத்தை பார்த்து படத்தில் சொல்லப்பட்ட விஷயத்திற்கும், அதை சொல்லிய விதத்தையும் பாராட்டியதோடு, வர்மனின் நடிப்பையும் வெகுவாகா பாராட்டினார்கள்.

 

இப்படி பலரது பாராட்டை பெற்றாலும், பலவித நெருக்கடிக்கும் பிரான்மலை படம் ஆளானாலும், படம் நன்றாக இருப்பதால், ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ என்று பெரிய படங்கள் வெளியானாலும், பிரான்மலை படத்தை பல திரையரங்கங்கள் எடுக்காமல் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பிரான்மலை’ இன்று 25 வது நாளை கடந்திருக்கிறது.

 

Piranmalai

 

படத்தின் இந்த வெற்றி, தங்களது உழைப்புக்கு கிடைத்த வெற்றி என்று கூறி ஹீரோ வர்மன் உள்ளிட்ட ‘பிரான்மலை’ குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.