Apr 23, 2019 07:18 AM

விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை!

விஜய்க்கு அக்காவான பிரபல நடிகை!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புது படத்தின் கதை சம்மந்தாக சர்ச்சை எழுந்துள்ளது. இதையெடுத்து நீதிமன்றத்தில் குறும்பட இயக்குநர் ஒருவர், படத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதோடு, படப்பிடிப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

 

இப்படி என்னதான் படத்திற்கு எதிராக பிரச்சினைகள் எழுந்தாலும், படப்பிடிப்பு எந்தவித தடையும் இன்றி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

 

இதில் விஜய் பெண்கள் கால்பந்தாட்ட பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதோடு, விளையாட்டுத் துறையில் நடைபெறும் மோசடி குறித்து பேசுகிறாராம். 

 

நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில், மேயாத மான் புகழ் இந்துஜா முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.

 

இந்த நிலையில், விஜய்க்கு அக்காவாக நடிகை தேவதர்ஷினி நடித்து வருகிறார். 5 நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட தேவதர்ஷினி, படத்தின் விஜயின் காமெடி அமோகமாக இருக்கும், என்றும் கூறியுள்ளார்.

 

Actress Devadarshini