Dec 07, 2018 05:50 AM

காணாமல் போன பவர் ஸ்டார்! - போலீசில் புகார் அளித்த மனைவி

காணாமல் போன பவர் ஸ்டார்! - போலீசில் புகார் அளித்த மனைவி

தமிழ் சினிமா காமெடி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் சீனிவாசன், காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சொந்த காசில் பப்ளிசிட்டி தேடும் பப்பூன்களில் ஒருவராக கோடம்பாக்கத்தில் எண்ட்ரிக்கொடுத்த பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு, மற்றவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு நடிக்க தொடங்கிய இவர், நடிப்பில் காமெடி இல்லை என்றாலும், இவரையும் ஒரு காமெடி நடிகராக கோடம்பாக்கம் அங்கீகரித்தது.

 

அதன்படி, பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், அவ்வபோது மோசடி வழக்கில் சிறைக்கும் சென்று வந்தார்.

 

இந்த நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி என்பவர், அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், நண்பரை பார்க்க சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன், வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.