டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பிரபாஸ் ஹீரோயின்!

தென்னிந்தியாவின் பல பகுதிகளில் டெங்கு காய்ச்சல் வேகமாக பவி வருகிறது. இதனால் பலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வரும் நிலையில், திரையுலக பிரபலங்கள் பலரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சரவணன், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பிரபல நடிகையான ஸ்ரத்தா கபூரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘சாஹோ’ படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் ஸ்ரத்தா கபூர், தொடர்ந்து பல தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, பெரும் அவதிக்குள்ளாகியிருக்கும் ஸ்ரத்தா கபூர், கடந்த இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய ஸ்ரத்த கபூர், மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் இரண்டு வாரங்கள் ஒய்வில் இருந்து, தற்போது பூரணமாக குணமடைந்துவிட்டாராம். இதனால் மீண்டும் படப்பிடிப்புகளிள் பங்கேற்க தயாராகி வருகிறாராம்.