May 03, 2020 07:52 AM

அரசியல் பட இயக்குநருடன் கைகோர்த்த ராகவா லாரன்ஸ்!

அரசியல் பட இயக்குநருடன் கைகோர்த்த ராகவா லாரன்ஸ்!

இயக்குநர் மற்றும் நடிகரான ராகவா லாரன்ஸ், கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் பலருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருவதோடு, சினிமா துறையை சேர்ந்த பல சங்கங்களுக்கும் நன்கொடை வழங்கி வருகிறார். தற்போது பாதிக்கப்பட்டவர்கள் பலரிடம் இருந்து உதவியை பெற்று வழங்கும் நடவடிக்கையிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

 

அதே சமயம், தனது புதுப்படங்கள் பற்றிய அறிவிப்புகளையும் ராகவா லாரன்ஸ் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த கதிரேசன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கும் ராகவா லாரன்ஸ், பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி 2’ விலும் ஹீரோவாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு லாரன்ஸ் அறிவித்திருந்தார்.

 

இந்த நிலையில், இந்த இரண்டு படங்களுடன் மேலும் ஒரு புதுப்படத்தில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கிறாராம். காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி, ஹீரோவாக நடித்த அரசியல் திரைப்படமான ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கி கே.ஆர்.பிரபு இப்படத்தை இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறாராம்.

 

Director KR Prabhu and Producer Isari K Ganesh

 

இயக்குநர் கே.ஆர்.பிரபு மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் கூட்டணியில் வெளியான ‘எல்.கே.ஜி’ படத்தில் சமகால அரசியலை நையாண்டி செய்யும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருந்ததோடு, மக்களில் சில போரட்டங்களை மறைமுகமாக விமர்சனம் செய்தும் இருந்தார்கள். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைந்துள்ளனர்.

 

இதுவரை மூன்று புதிய படங்களில் ஹீரோவாக ஒப்பந்தமாகியிருக்கும் ராகவா லாரன்ஸ், கொரோனா பிரச்சினை முடிந்து சினிமா படப்பிடிப்புகள் தொடங்கிய உடன், இந்த மூன்று படங்களில் எந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் தொடங்க இருக்கிறது, என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளாராம்.